
குக் வித் கோமாளி புகழ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பலரது வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்போது வெள்ளித்திரையில் நடித்து, பிரபலமானவர் நடிகர் புகழ்.
கடலூரில் ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்த இவர் சென்னையில் எண்ணற்ற வேலைகளை செய்து தனது உழைப்பால் இப்பொழுது ஒரு கலைஞனாக உயர்ந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1 அன்று தம் நீண்ட நாள் காதலியான பென்சியை பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடிகள் பல செய்து, அவர் இல்லை என்றால் நிகழ்ச்சியே நன்றாக இருக்காது என்ற அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இன்று திருமண நாளை கொண்டாடும் புகழ் தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு, ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார். அதாவது அவரது மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம்.
இதை தன் இன்ஸ்டா பக்கத்தில், என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை❤️என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்… இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டும் உள்ளார்.
இந்த செய்தி பார்த்ததும் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.