விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இதை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இவர் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம். இதன் மூலம் இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
சின்னத்திரையின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற சிவாங்கி, இதன் மூலம் தற்பொழுது வெள்ளி திரையிலும் கால் பதித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக கால் பதித்து ஜொலித்து வருகிறார் நடிகை சிவாங்கி.
இதை தொடர்ந்து வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது ஷிவாங்கி குக் வித் கோமாளி 4 -வது சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சிவாங்கி. இவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஹலோ, எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள். எல்லாரும் நன்றாக தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வருகிறேன்.
என்னால் எந்திரிக்க கூட முடியவில்லை. உங்களின் அன்பு எனக்கு புத்துணர்ச்சி தருகிறது. உங்கள் அன்பு மட்டும் இல்லையென்றால் நான் இல்லை’ என்று கூறியுள்ளார். தற்பொழுது ஷிவாங்கியின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்காக வேண்டி கமெண்டுகளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதோ அவரின் பதிவு…