‘இந்த ஜென்மம் மட்டுமல்ல எல்லா ஜென்மத்திலும் நீ வேண்டும்’…  கணவரின் பிறந்தநாளுக்கு எமோஷனல் பதிவு வெளியிட்டு வாழ்த்து கூறிய CWC கனி…

விஜய் டிவியில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கனி. அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள், இயக்குனர் திருவின் மனைவி.

   

இதனைத் தவிர தனக்கென பல அடையாளத்தையும் சொந்தமாக கொண்டவர் தான் கனி. இவர் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான விஜயலட்சுமியின் அக்கா ஆவார். காதல் கோட்டை படம் மூலம் அஜித், தேவயானிக்கு சூப்பர் பிரேக் கொடுத்த பிரபல இயக்குநர் அகத்தியனின் மூத்த மகளான இவருடைய உண்மையான பெயர் கார்த்திகா என்பது ஆகும்.

முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இவர் தற்போது தனது youtube சேனலில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரின் கணவர் திரு ஒரு இயக்குனர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஒரு பக்கம் குக்கிங் வீடியோ, கதை சொல்லும் தோழி,குடும்பத் தலைவி மற்றும் இரண்டு தங்கைகளுக்கு மூத்தா அக்கா என்று இவரின் லைப் ஸ்டைல் எப்போதும் பிஸியாக தான் இருக்கும்.

இவர்  வள்ளி மயில் என்ற படத்திலும் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் கனி. இவர் தற்பொழுது தனது கணவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வைரல் பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Kani Thiru (@kanithiru10)