10 வருடங்களை கடந்த ‘மரியான்’ திரைப்படம்… படக்குழுவினருடன் லைவ் செய்து இணையத்தில் கொண்டாடிய தனுஷ், ஏ ஆர் ரஹ்மான்… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவாராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.  இவருடைய நடிப்பில் இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரியான்’.  தனுஷுக்கு  ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

   

மீனவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தனுஷ் தனது சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

அதில், ‘நேற்று அவள் இருந்தால்’, ‘கொம்பன் சூறா’, ‘சோனா பரியா’ போன்ற பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. குறிப்பாக தனுஷ், பார்வதி, ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகவும் மரியான் திரைப்படம் இருந்து வருகிறது. மேலும் விருதுகளையும் இப்படம் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த மரியான் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த நிகழ்வை சிறப்பாக்கும் வகையில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தனுஷ் ஆகியோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் நேரலையில் வந்தனர்.

இந்த நேரலையில் தனுஷ், பார்வதி, ஏ ஆர் ரஹ்மான் , இயக்குனர் பரத் பாலா, பாடகர் விஜய் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இதில் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் உருவான விதம் குறித்தும் படக்குழுவினர் ரசிகர்கள் முன்னிலையில் கலந்துரையாடினர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ…