தோனி தயாரிப்பில் உருவான LGM திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா… வெளியான புகைப்படங்கள்..!!

இந்தியாவின் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும் அவரின் மனைவியும் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

   

இந்த நிறுவனத்தின் மூலமாக தமிழில் லேட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க இவானா, நதியா, யோகி பாபு மற்றும் டிடிவி கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழில் விட்னஸ், தெலுங்கில் அஹம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி என்ற திரைப்படத்தை இயக்கி இசை அமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதை அம்சம் கொண்ட நிலையில் ரமேஷ் திருமேனி இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்திலிருந்து அண்மையில் வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னையில் லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருவரும் இணைந்து படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த படத்தின் டிரைலர் இன்றைய இளம் தலைமுறைக்கு பிடிக்கும் வகையில் ஒரு வித்தியாசமான காதல் கதையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு முன்பு மாமியார் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள இரண்டு குடும்பத்தினரும் சேர்ந்து டூர் போகின்றனர்.

அப்படி டூர் போன இடத்தில் நதியாவும் இவானாவும் நட்ட நடு காட்டில் தொலைந்து போக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கலகலப்பான நகைச்சுவையுடன் டிரைலர் வெளியாகி உள்ளது.

தமிழ், மலையாள மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் எல் ஜிஎம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

தற்போது இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.