மகனின் புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் பகிர்ந்த ‘கயல்’ சீரியல் நடிகை… வெளியான அழகிய புகைப்படங்கள்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பியில் முன்னணியில் இருந்து, ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.

   

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த சீரியலின் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்.

 

இவருக்கு ஜோடியாக கதாநாயகனாக களமிறங்கி நடத்தி வருபவர் சஞ்சீவ். கயலின் தங்கையாக நடிகை அபிநவ்யா நடித்து வருகிறார்.

இவர் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் சீரியல்களில் தொடர்ந்து நடித்த வண்ணமே இருந்தனர்.

இதைத்தொடர்ந்து நடிகை அபிநயா தனது instagram பக்கத்தில் தன்னுடைய பிரசவ புகைப்படத்தை வெளியிட்டு தன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு  ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நடிகர் தீபக் தனது மனைவி அபிநவ்யா மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்