‘உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா?’… ரோபோ ஷங்கர் மகள் வெளியிட்ட வீடியோ… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது திரையுலகில் நடிகையாக கால் பதித்து கலக்கி வருகிறார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பிகில் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

   

இத்திரைப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவரின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பின்னர் ரோபோ ஷங்கருக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் இந்திரஜா ஷங்கர். இத்திரைப்படத்திற்கு பின்னர் தன் மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோசங்கர் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிதி ஷங்கரின் தோழியாக நடிகை இந்திரஜா நடித்து கலக்கினார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை இந்திரஜா ஷங்கர் . இவர் தற்பொழுது விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்ற காட்டுமல்லி பாடலுக்கு வீணையை இசைத்த அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா? என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)