குழந்தைகள் சந்திப்பில் தனது இரண்டாவது படத்தின் அப்டேட்டை வெளியிட்ட லெஜன்ட் சரவணன்…. வைரலாகும் வீடியோ…

தமிழ் திரையுலகில் தி லெஜண்ட் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர்.நடிகர் லெஜண்ட் சரவணனை. இப்படத்தை ஜெடி மற்றும் ஜெர்ரி என்ற இரண்டு இயக்குனர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர். இப்படத்தில் யோகி பாபு, பிரபு,  நாசர், கோவை சரளா,  ரோபோ சங்கர், மயில்சாமி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விவேக்கின் கடைசி திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

   

இதில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் லெஜெண்ட் சரவணன் இவர் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அதைத் தொடர்ந்து இப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் ஓரளவு வசூல் செய்தது இதைத் தொடர்ந்து லெஜன்ட் சரவணன் தன்னுடைய இரண்டாவது படத்திற்காக கதை கேட்டு வருகிறார் என்று தகவல் வெளியானது இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தில் இரண்டாவது அப்டேட் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் கூட நடிகர் விஜய் 10 மட்டும் 12-ம் வகுப்பில் முதன் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். அதே  போல் வளர்ந்து வரும் மாணவர்களை அழைத்து பரிசு வழங்கி அவர்களுடன் நடனம் கூட ஆடியுள்ளார் லெஜண்ட்.அதுமட்டுமல்லாமல் தான் நடிக்க போகும் படத்திற்கு கதையை தேர்ந்தெடுத்து விட்டதாகும் விரைவில் அதற்கு அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.