தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மோகன். ஜி. இவருடைய உண்மையான பெயர் மோகன் ஜி க்ஷத்ரியன்.
இவர் சென்னையைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள Pak Palanisamy School ல் பள்ளி படிப்பை முடித்தார்.
அதன் பிறகு சென்னையில் உள்ள Jaya college ல் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்தார் (Drop Out). 2016 ஆம் ஆண்டு வெளியானம் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலமாக தமிழ் திரைலகியுல் இயக்குனராக அறிமுகமானார்.
இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் ‘ருத்ர தாண்டவம்’ மற்றும் ‘பகாசுரன்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் மோகன். ஜி மோகனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இவரது மனைவி சோசியல் மீடியாவின் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.