திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா உடன் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?.. அடடே இவரா!!!

இயக்குனர் சுதா  கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான படம்  ‘சூரரை போற்று’  இந்த திரைப்படமானது நாடு கடந்து பல ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இப்படத்திற்காக நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.  இதைத் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ என்ற ஃபேண்டஸி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில்  நடிகர் சூர்யா படத்தில் நான்கு வேடங்களில் நடித்த கூறப்படும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் இந்தியா பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

   

இந்த திரைப்படத்தில் நடித்த முடித்த பின்னர் இரண்டாவது முறையாக சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது  இந்த படத்தின் பிரீ புரோடக்ஷன் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.தற்போது இந்த படத்தை குறித்து சில முக்கிய தகவல்களும் வெளியாகிய நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான்  நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது. இவரை தொடர்ந்து நடிகை  நஸ்ரியா சூர்யாவுக்கு ஜோடியா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . நடிகை நஸ்ரியா தமிழில் வெளியான நேரம், ராஜா, ராணி, நய்யாண்டி போன்ற படங்களின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இவர் நடிகை நயன்தாரா, சமந்தாவை போல கலக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் மலையாள நடிகர் ஆன பகத் பாசிலை 2014 ஆம் ஆண்டு  திருமணம் செய்து  கொண்டு அதன் பிறகு திருமணத்திற்கு பின்னர் ஒரு சில மலையாளத் திரைப்படங்களில் மட்டும் நடித்த நடிகை நஸ்ரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக குறிப்பிடப்படுகிறது விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது இந்த வருடத்திலேயே துவங்கும் என குறிப்பிடப்படுகிறது.