பஸ்ல கண்டெக்ட்டர் டிக்கெட்டை ஏன் கிழிச்சி தாரங்க தெரியுமா? இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா..!!

90களில் பேருந்தில் செல்வது என்பது குழந்தைகளுக்கு மிகப் பிடித்த ஒன்று  இருக்கும்  அவ்வளவு மகிழ்ச்சி முகத்தில் இருக்கும்  அதிலும்  ஜன்னல் சீட்டு மட்டும் கிடைத்து விட்டால் கொள்ள மகிழ்ச்சியாக இருக்கும்.ஜன்னல் சீட்டில் வேடிக்கை பார்த்து வரும் காட்சி மிகவும் அழகான  தருணமாக இருக்கும். இந்நிலையில் பேருந்து நடத்துனர்  டிக்கெட்டில் கிழித்து தருவார் எதனால் அவ்வாரு  செய்கிறார் தெரியும?. அதை பற்றி காண்போம்.

   

அந்த பயண சிட்டில் மே என்று போட்டு இருக்கும் மே என்பது மேல்  என்ற அர்த்தம் .அந்த மே போட்டிற்கும் இடத்தில் ஒன்றில் இருந்து 16 வரை இருக்கும்.அதே போல் மற்றோரு பகுதியில் கீ  என்று போடு இருக்கும் கீ என்பது  கீழ் என்ற அர்த்தம்.அந்த கீ போட்டிற்கும் இடத்தில் 17 முதல் 32  வரை கொடுத்துள்ளனர்.மே என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் என்றால் ஒரு பேருந்து அதனுடைய முதல்  ஸ்டாப்பிங்கில் இருந்து கடைசி ஸ்டாப்பிங்கில் வரை செல்வதை குறிக்கிறது.

அதே போல் கீ என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் என்றால் அதே பஸ் கடைசி ஸ்டாப்பில் இருந்து முதல்  ஸ்டாப் வரை போறதையும் கீ என்று கூறுகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு பஸ் சென்னையில் இருந்து மதுரை செல்கின்றது என்றால் அதை  மேல் என்றும் அதே  போல் பஸ் மதுரையிலிருந்து சென்னை வருகிறது என்றால்  இதை கீழ் என்று  குறிக்கிறது.  நடத்துனரிடம் பஸ் டிக்கெட் வாங்கும் பொழுது நாம் எங்கே இறங்க வேண்டும் என்று கூறுகிறோமோ அந்த ஸ்டாப்பிற்கான நம்பரை கிழித்து தருவார்.