பாக்கியலட்சுமி சீரியலில்…என்ட்ரி  கொடுக்கும் நடிகர் சித்தார்த்…. இப்படி ஒரு கேரக்டரா… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

விஜய் டிவி ஒளிபரப்பாக வரும் பாக்கியலட்சுமி சீரியல்களுக்கு  என்று ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்த சீரியலில் கணவர் மற்றும் குடும்பத்தினரால் அவமானப்படுத்தப்படும் ஒரு பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பல போராட்டங்களை தாண்டி வாழ்க்கையில் வெற்றி பெற்று கொண்டிருப்பது போன்று தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.

   

அதுபோல பல வருடங்களை தாண்டி பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணி இடத்தில் இருக்கிறது. அவருடைய கணவர் கோபி மற்றும் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவால் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் எல்லாம் பாக்கியா தைரியமாக போராடி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட ராதிகா வேலை செய்யும் ஆபீஸில் கேண்டீன் ஆர்டர் எடுத்து இருக்கிறார்.

அதை எப்படியாவது தடுத்து பாக்கியாவை கம்பெனியில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று ராதிகா எத்தனையோ முறை முயற்சி செய்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை இந்த முறை கம்பெனியில் அதிகாரம் ராதிகாவிற்கு வந்திருக்கும் நிலையில் பாக்கியாவை பழி வாங்குவதற்காக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகர் சித்தார்த் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அமிர்தாவின் குழந்தை நிலா தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சித்தார்த் பைக்கில் விழுந்து விடுகிறார். அப்போது குழந்தையை சித்தார்த் காப்பாற்றுகிறார். அப்போது அமிர்தா குழந்தையை கையில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் பாக்கியா சித்தார்த்துக்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறார். அதுபோல இனியாவும் அமிர்தாவை திட்டிக் கொண்டிருக்கிறார். குழந்தையை சரியாக கவனிக்கவில்லையா என்று பேசிக் கொண்டிருக்கும் போது பாக்யா சித்தார்த்தை வீட்டிற்குள் அழைக்கிறார். இப்படியாக சூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே அமிர்தாவின் முதல் கணவர் கணேசன், அமிர்தா மற்றும் நிலாவை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் இனி சித்தார்த் சீரியலில் அறிமுகமாகி இருப்பதால் கதை வேகம் எடுக்க இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)