நண்பர்களுடன் இன்ப சுற்றுலா சென்ற பிரபல பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாம்பாய்’  இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

   

இப்படத்தில் அரவிந்த் சிவசாமி ,மனிஷா கொய்ராலா,  நாசர், பிரகாஷ்ராஜ்,  சுஜிதா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ஷைலா பானுஎன்ற கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர், நடிகை மனிஷா கொய்ராலா.

இவர் நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தந்தை பிரகாஷ்  தாய்  சுஷ்மா.  வாரணாசியில் உள்ள வசந்த் கன்யா மகாவித்யாலயாவில்கனியா மஹா வித்தியாலயா பள்ளியின் பத்தாம் வகுப்பு வரை பயின்றார்.

அதை  தொடர்ந்து புது தில்லி வளாகத்தில் உள்ள தௌலா குவான் இராணுவப் பொதுப் பள்ளியில் (APS) படித்தார்.1989 ஆம் ஆண்டு வெளியான  ‘ஃபெரி பெட்டாலா’ என்ற  நேபாள மொழியில் நடித்து திரையுலகில்  அறிமுகமானார். ஹிந்தியில் இவரது முதல் படமான ‘சௌடாகர்’ 1991ல் வெளிவந்தது.

அதன்பிறகு ‘பாம்பாய்’ என்ற தமிழ்   திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இவர்  தமிழில்  இந்தியன்,  முதல்வன்,  பாவா , ஆளவந்தான்,  மாப்பிள்ளை போன்ற ஒரு சில படங்களில் நடித்த்து  மக்கள் மத்தியில் இருந்து வரவேற்பு  பெற்றார்.

தற்போது இவர் பாலிவுட் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான’ ஷெஹ்சாதா’ என்ற படம்  வெளியானது இப்படம் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர் ஒரு trip  சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.