தான் சந்தித்த பிரபலங்கள் தற்போது இவ்வுலகில் இல்லை என்பதை வருத்தத்துடன் புகைப்படத்தை பகிர்ந்த  பிரபல சீரியல் நடிகை சத்யபிரியா…. 

சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’.இந்த சீரியலுக்கு என  மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த சீரியலை  திரு செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார்.

   

இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே அதிகமான ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது. சீரியல் முழுக்க பெண்களை மட்டும் மையப்படுத்தி ஆணாதிக்கம் உள்ள ஒரு குடும்பத்தில் ஒரு பெண் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறாள் என்பதை பற்றியும்,

அதிலிருந்து அவள் எப்படி வெளி வருகிறாள் போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டு இந்த சீரியல் காட்டப்படுகிறது.இந்த சீரியல் வீட்டு  இல்ல தரசிகளின் மனதில் மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.

இந்த சீரியலில் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சத்யபிரியா.1956 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.1975 ஆம் ஆண்டு ‘மஞ்சள் நிற முகம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தீபம் ,புதிய பாதை, மனிதரில் இத்தனை நிறங்களா போன்ற படங்களில் நடித்துள்ளார்.ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு குறைந்த போது அம்மா கேரட்டிலும் வில்லி கேரட்டிலும் நடிக்க துவங்கினார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல  மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 50 படங்களில்  ஹீரோயினியாக நடித்துள்ளார்.நடிகை சத்யா பிரியா இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைய சீரியல் என்ட்ரி கொடுத்தார்.  கோலங்கள், இதயம், வம்சம் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

சமீபகாலத்தில் 2014 வெளியான வாயை மூடி பேசும் என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை சத்யபிரியா என் எஸ் முகுந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு கருணாநிதி அவர்கள் நடிகை ஸ்ரீதேவி,முன்னாள்  முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா போன்றவர்களுடன் தான்  இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நான் சந்தித்த சிலர் இவ்வுலகில் இல்லை என்று  வருத்தத்துடன் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.