இது நல்லாருக்கே!… லியோ படம் அங்க தியேட்டர்ல ஓட.. இங்க ரசிகர் தாலி கட்ட… ‘தளபதி’ கோஷத்துடன் களைகட்டிய திருமணம்…!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் மஞ்சுளா இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் நாளை அவர்களுக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்களான வெங்கடேஷ் மற்றும் மஞ்சுளா இன்று வெளியாகியுள்ள லியோ திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் வைத்து திரை முன்பு மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டனர்.

   

ரசிகர்களின் கரகோஷத்துடன் ஆரவாரமாக அவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த காதல் தம்பதி, மாலை மாற்றிக்கொள்ளும் போது, பின்புறத்தில் ரசிகர்கள் “தளபதி, தளபதி” என்று கோஷமிட்டனர். தளபதி விஜய்க்காக கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக்கொண்டதாக கூறிய வெங்கடேஷ், நாளை உறவினர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

மேலும், இருவருமே விஜய் ரசிகர்கள் என்பதால், அவரின் கையால் தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். எனவே, தான் விஜய்யின் திரைப்படம் ஓடும் திரையரங்கில் வைத்து திருமணம் செய்து தங்களின் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.