என்னால சாப்ட கூட முடியல விசித்திர நோயால் அவதிப்பட்டு வரும் ராட்சிதா ஷாக்கான ரசிகர்கள்..!!

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்  நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி.இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார்.நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று  ‘சரவணன் மீனாட்சி’.இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

   

சரவணன் மீனாட்சி தொடரில் சீசனுக்கு சீசன் சரவணன் கதாபாத்திரம் மாறினாலும், மீனாட்சி கதாபாத்திரமானது ரக்ஷிதா மட்டும் மாறாமல் நடித்துக் கொண்டிருந்தார்.நடிகை மகாலட்சுமி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3யில் நடுவராக இருந்தார்.

பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். ஆனால் ரக்ஷிதாவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் நடித்தார்.அதை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை என்பதால் சின்னத்திரை  சீரியல்களில் நடித்து வருக்கிறார்.

விஜய் டிவி தொலைக்காட்சியில்  சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக ரக்ஷிதா கலந்து கொண்டார்.நடிகை ரக்ஷிதா பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பிறகு இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர் தனது உடலில் இருக்கும் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சில பேருக்கு சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும் நான் நானெல்லாம்  மோந்து பார்த்தாலே உடல் எடை கூடிவிடும். அப்படியான ஹார்மோன் பிரச்சனை எனக்கு இருக்கிறது. ஒரு நடிகை உடல் எடையை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று ,

அப்படி இருக்கும் போது என்னுடைய உடல் எடை கூடி விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்து வருகிறேன். மருத்துவரை பார்க்கச் சென்றால் நீங்கள் சாப்பிடவே வேண்டாம் ஒரு உணவை முகர்ந்து பார்த்தாலே போதும் உங்களுக்கு உடல் எடையை கூடிவிடும்.நான் உடல் எடை அதிகமாகக் கூடாது என்று உணவு முறைகளை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.