நடிகை கீர்த்தி சுரேஷை தொடர்ந்து… பிரபல தயாரிப்பாளர் மகளுடன் நெருக்கமாக இருக்கும் அனிருத்…. அந்த நடிகை யார் தெரியுமா?..

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார்.

   

அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இந்தியன் 2, ஜெயிலர், தளபதி 67 மற்றும் ஏகே 62 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிகை கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துகொள்ள போவதாகவும். காதலிப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதெல்லாம் பொய்யான தகவல் என்றும் நாங்கள் நண்பர்கள் தான் என்று வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார்.

இந்நிலையில் அனிருத் தயாரிப்பாளர் மகளுடன் உறவில் இருக்கிறாராம். மேலும் நெருக்கமாக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.