
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படத்தில், அவருடன் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரசாந்த், யோகி பாபு, வைபவ், அஜ்மல் அமீர், பிரேம்ஜி மற்றும் அரவிந்த் ஆகாஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில், விஜய் உடன் இணைந்து அவருக்கு ஜோடியாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகை மீனாட்சி சௌத்ரி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, தளபதி விஜய்யுடன் நடிக்கப்போகிறோம் என்று தெரிந்த பிறகு மகிழ்ச்சியில் என் இதயத்துடிப்பே நின்று போவது போன்று உணர்ந்தேன்.
தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது. அதிர்ஷ்ட சாலிகளுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். தற்போது எனக்கு கிடைத்துள்ளது. விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்தார். அதைக் கேட்டவுடன் நான் நடுங்கி விட்டேன்.
படப்பிடிப்பு தளத்தில் விஜய் என்னிடம் பழகிய விதத்தை வார்த்தைகளால் கூற முடியாது. அவரின் மிகப்பெரிய தீவிரமான ரசிகை நான் என்று தெரிவித்துள்ளார்.