
சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேற்கு தாம்பரத்தில் ஒரு வீடே வெள்ளத்தில் மூழ்கிவிட்டது.
#ChennaiFloods have impacted many people in #Chennai and rescue operations are underway!pic.twitter.com/HRNpaRGwBk
— Chennai Weather-Raja Ramasamy (@chennaiweather) December 5, 2023
மீட்பு குழுவினர் அந்த வீட்டிலிருந்த நபர்களை வெளியில் மீட்டு வந்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுவன் அழுதுகொண்டே நானும் அம்மாவும் மட்டும் தான் தனியா இருந்தோம். அப்பா எங்கையோ போயிட்டாரு. நீங்க வரலைனா நாங்க உள்ளே செத்துருப்போம் என்று கூறுகிறார். மீட்பு குழுவினர் அந்த சிறுவனை தேற்றி ஆறுதல்ப்படுத்தினர்.