தொகுப்பாளினி அறந்தாங்கி நிஷாவின் மொத்த சம்பளம் இவ்வளவு தானா?… நிகழ்ச்சியில் உண்மையை உளறிக் கொட்டிய பிரபலம்… தீயாய் பரவும் தகவல் உள்ளே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது  தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

   

நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். அழகிய ஜோடியான இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அறந்தாங்கி நிஷாவும் அவரது கணவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தற்பொழுது இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ 4வது சீசனையும் தற்பொழுது தொகுத்து வழங்கி வருகிறார் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நக்கீரன் கோபால் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது இடையில், ராமர் குறுக்கிட்டு ‘நீ எல்லாம் ஆங்கரா? அருண் ஐஸ் கிரீம் சாப்பிட்டு, 5000 பேமெண்ட் வாங்கிட்டு போ என்று தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து தற்பொழுது அறந்தாங்கி நிஷாவின் சம்பள விவரம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் ‘ஒரு நிகழ்ச்சிக்கு 5000 ரூபாய் மட்டும் தான் சம்பளமாக பெறுகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.