சென்னை மக்களுக்காக ஓடோடி வந்த சிவா அண்ணன்… நிவாரணம் மட்டும் எவ்வளவு தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.  இவர் ‘மெரினா’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, மான் கராத்தே, காக்கி சட்டை, வேலைக்காரன், கனா போன்ற பல  சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.சமீபத்தில் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் விவகாரமானது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு.

   

தற்போது அயலான், எஸ்கே 21,  எஸ் கே 23 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்ற வாரம் மிக்ஜாம் புயலால் காரணமாக சென்னை மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டா  மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு பிரபலங்கள் உதவி அளித்து வருகின்றனர். விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் மூலமாக நேரடியாக மக்களுக்கு உதவி வருகின்றனர்.

ஒரு  சிலர் முதலைச்சரின் நிவாரண நிதிக்கு தங்கள் உதவி தொகையை அனுப்பி வருகின்றனர்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நிவாரண தொகையாக ரூபாய் 10 லட்சம் கொடுத்திருக்கிறார். இதை புகைப்படம் எடுத்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.