நடிகை அனுஷ்காவிற்கு திருமணமா..! மாப்பிள்ளை யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளின் ஒருவர் தான்  நடிகை அனுஷ்கா.இவர் இயக்குனர்  சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘இரண்டு’ படத்தில் நடித்த தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  அதைத் தொடர்ந்து  வேட்டைக்காரன், சிங்கம் , ருத்ரமாதேவி, பாகுபலி போன்ற சூப்பர் ஹிட்  படங்களில் நடித்துள்ளார்.

   

 

அதன் பிறகு இவர் ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற திரைப்படத்திற்காக உடல் எடை அதிகரித்தவர் அதன் பிறகு உடல் எடையை குறைக்க பல விதமான உடற்பயிற்சிகள் செய்தும்  பழைய நிலைக்கு திரும்ப முடியவில்லை. இதனால் பட வாய்ப்புகள் இழந்தார் நடிகை அனுஷ்கா. தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் 42 வயது ஆகியும்  திருமணம் செய்யாமல் இருக்கும் அனுஷ்கா ஷெட்டிக்கு  விரைவில் திருமணம் செய்ய போவதாகவும். அவர் பிரபல கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.   அப்போது நடிகர் பிரபாஸ்  காதலிப்பதாக பரவிய செய்தி வதந்தியா?. இந்த தகவலாவது உண்மையாக இருக்குமா? என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.