புதிய தொழிலை தொடங்கும்’நள தமயந்தி’ சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் ..

இந்த காலகட்டத்தில் வெள்ளித் திரையை விட சின்னத்திரை தான்  மக்கள் அதிகமாக பார்த்து வருகின்றனர். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் புது புது தொடர்களும் ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றனர்.

   

வெள்ளித் திரையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்  நடிகர்களைக் கூட மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், சின்னத்திரையில் சீரியலில் சின்ன ரோலில் நடிக்கும் நடிகைகள்  கூட மக்கள்  மனதில் நீங்கா இடம் பிடித்துயுள்ளனர்.

 

அந்த வகையில்  ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில்  மிகு ந்த வரவேற்பு பெற்ற சீரியல் தான் ‘நள தமயந்த’. இந்த  சீரியலில் தமயந்தி கதாபாத்திரத்தில்  நடிப்பவர்  தான் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் இந்த சீரியலில்  இருந்து விலக போவதாக  செய்திகள் பரவியது. இதையடுத்து அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி என்பவர் நடிக்க போவதாக கூறப்பட்டு வந்து.

இந்நிலையில் ஜீ தமிழ் சேனல் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டதாகவும், இந்த சீரியலின் இறுதி  படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாகவும் அதில் பிரியங்கா கேரக்டர் இறந்து விட்டதாக புகைப்படத்தை  காண்பித்து அவருக்கு எல்லோரும் அஞ்சலி செலுத்துவது போன்ற காட்சிகள் எடுக்க பட்டதாக  கூறப்பட்டது.

‘நள தமயந்தி’ தொடரில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கும் கேரக்டரில் பிரியங்கா நடித்து வந்தார்.தற்போது  நிஜ வாழ்க்கையில் அவர் ஹோட்டல்  ஒன்று  தொடங்கியுள்ளார். அதன் திறப்பு விழா புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்  பிரியங்கா நல்காரிக்கு  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.