‘லட்சுமி’ பட குழந்தை நட்சத்திரமா இவர்?… ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி வளந்துட்டாரே… வைரலாகும் வீடியோ இதோ….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தனது பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். தற்பொழுது இவர் பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் 2018ல் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘லட்சுமி’.

   

இத்திரைப்படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கினார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக பிரபுதேவா நடித்திருப்பார். இவர்களின் மகளாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை டித்யா பாந்தே. நடிகை டித்யா பாந்தே இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

இப்படத்திற்காக குழந்தை நட்சத்திரம்  டித்யா பாந்தே ஐந்து விருதுகளை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தொடர்ந்து இவர் சூப்பர் டான்சர் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றார். தற்பொழுது 16 வயதை எட்டிய நடிகை டித்யா பாந்தே வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

தற்பொழுது நடிகை டித்யா பாந்தே தனது ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்’ லட்சுமி படத்தில் வந்த குழந்தை நட்சத்திரமாக இவர்?’ என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.

வைரலாகும் வீடியோ இதோ…