நடிகை ஹன்சிகா விவாகரத்து பெற்றவரை இரண்டாவது திருமணம் செய்தது ஏன்?… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஹன்சிகா… வைரலாகும் வீடியோ இதோ…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி Sohael Khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்பூரில் உள்ள ஒரு பெரிய அரண்மனையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.

   

இத்திருமணத்தில் நெருக்கமானவர்களும், குடும்பத்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நடிகை ஹன்சிகாவின் கணவர் குறித்த பல செய்திகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. நடிகை ஹன்சிகாவின் கணவரான Sohael Khaturiya ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்றும், அவர் நடிகை ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்றும் பலர் கூறி வந்தனர்.

இதை தொடர்ந்து நடிகை ஹன்சிகா ஏன் திருமணமாகி விவாகரத்து பெற்றவரை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும், அவர் ஏன் இரண்டாவது மனைவியாக ஒப்புக்கொண்டார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.  இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோவை விரைவில் ஹாட்ஸ்டார் வெளியிட உள்ளது. அதன் ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் பேசும் பொழுது நடிகை ஹன்சிகா “You told me don’t look at anyone’s past” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த காட்சியானது அவர் தனது அம்மாவிடம் கூறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவரது இறந்த காலத்தை பற்றி கவலை இல்லை என்பதால் தான் ஹன்சிகா திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் என்பது இதன் மூலம் நமக்கு தெளிவாக இருக்கிறது. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)