‘இப்போது அந்த சம்பவத்தை நினைத்தாலும் அதிர்ச்சியாக’ தான் இருக்கிறது…. தனது மன குமுரலை வெளிப்படுத்திய தொகுப்பாளினி ஐஸ்வர்யா…

இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் தயாரிப்பு  அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ். டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுத, எஸ்.தேவராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் கே.பாக்யராஜ்,கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, பழ கருப்பையா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

   

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று செப்டம்பர் 19சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். மேடையில் பேச வந்த நடிகர் கூல் சுரேஷ். தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை திடீரென தனக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பெண் தொகுப்பாளரின் கழுத்தில் அவரது அனுமதியின்றி போட்டார். இதனால் எரிச்சலடைந்த அந்த தொகுப்பாளர் மேடையிலேயே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை குறித்து பேசிய தொகுப்பாளர் ஐஸ்வர்யா, எனக்கு அந்த சம்பவம் இப்பொது நினைத்தாலும் அதிர்ச்சியா இருக்கு. பொது மேடையில் திடீர்னு இப்படி நடந்துகிட்டா என்னங்க செய்ய முடியும்? எனக்கு அப்பவே அவரை அடிச்சி இருக்கனும் என தோணுகிறது.இதற்கு முன்னாடியும் என்னிடம் அப்படி நடந்திருக்கிறார். இனி அப்படி செய்தால் கன்னத்துல ஒரு அடியாவது கொடுத்திடுவேன் இல்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடுவேன் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.