போடு வேற லெவல்.. ஜெயிலர் படம் குறித்து தனுஷ் போட்ட டுவீட்.! விசில் அடித்து கொண்டாடும் ரசிகர்கள்…!

ஜெயிலர் படம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு போன்ற முன்னணி நடிகர்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் இந்த படத்தின் “காவாலா” என்ற பாடல் வெளியான நிலையில், அதிகளவு ஹிட்டாகி, சமூக வலைத்தளங்களில் முன்னணி நடிகைகள் முதற்கொண்டு இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ரஜினியின் 'ஜெயிலர்' படம் குறித்த செம அப்டேட்! - தமிழ் News - IndiaGlitz.com

   

ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ள நிலையில், தென் இந்திய சினிமா படங்களிலேயே கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்திருப்பதாக கூறப்படுகிறது.

JAILER - Kaavaalaa Lyric Video | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh |Nelson |Tamannaah- Dinamani

நடிகர் தனுஷ் டுவிட்

இந்நிலையில், ஜெயிலர் படத்தை குறித்து நடிகர் தனுஷ் டுவிட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இது ஜெயிலர் வாரம் என குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதாவது தனுஷ், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இருந்தாலும், தனது முன்னாள் மாமனார் ரஜினி மீது அவர் வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்துவதாக, இந்த பதிவு உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.