
ஜெயிலர் விநாயகன்
1995 ஆம் ஆண்டு மாந்திரிகம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகர் விநாயகன். இவர் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த மற்றும் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி வசூல் சாதனை படைத்த ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு முக்கிய காரணம் என்றும் ரஜினிக்கு வில்லனாக நடிப்பது என்றால் அது சாதாரணமான விஷயம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதை சிறப்பாகவும், மக்கள் ரசிக்கும்படியும் நடித்திருந்த விநாயகன், மலையாளம் கலந்த தமிழில் பேசிய வகை ரசிகர்களை மிகவும் வெகுவாக கவர்ந்து இழுத்தது.

அசரவைக்கும் வீடியோ
ஜெயிலர் படத்தில் விநாயகன் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இவரின் ரோலில் பேசியிருப்பது போல், மலையாள டிவியில் ஒன்றில், இவரை போல் அச்சு அசலாக அப்படியே மிமிக்கிரி செய்து ஒரு நபர் பேசியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Manasilayooo????????????????#Jailer#Thalaivar171#JailerIndustryHit pic.twitter.com/Gp5tEBi9pj
— ????ℝ????ℕ ℂ????ℕ???????? (@ArunCandy11) September 14, 2023