விஜய்யின் அரசியல் கணக்கு…. உக்ரைன் அதிபருடன் ஒப்பிட்ட ஜேம்ஸ் வசந்தன்… வைரல் பதிவு…!

பாடகர் மற்றும் தொகுப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் அவ்வப்போது, சினிமா மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களையும் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது தளபதி விஜய் அரசியலில் களமிறங்க போவதையும், உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அரசியலுக்கு வந்ததையும் ஒற்றுமைப்படுத்தி கூறியுள்ளார்.

அவர் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நூற்றுக்கணக்கான கோடிகளில் வருமானம் பார்க்கிற, உச்சத்திலுள்ள ஒரு நடிகர் தன் தொழிலுக்கே ஊறுவிளைவிக்கக்கூடிய ஒரு செயலில் அவ்வளவு எளிதாக இறங்கிவிடுவாரா? எவ்வளவு எண்ணங்கள் ஓடியிருக்கும்?
அதற்குப் பின்பும் அவர் இதில் இறங்குகிறார் என்றால், தன் தொழிலைத் தாண்டி இந்தப் பயணம் இவருக்கு முக்கியமானதாகத் தெரிகிறதென்றால் அந்த உந்துதல் உண்மைதானே?
இது என் புரிதல். வல்லரசு நாடான ரஷ்யாவை துணிவுடன் எதிர்த்து நின்று ஓராண்டுக்கும் மேலாகக் கடுமையாகப் போரிட்டு வரும் குட்டி நாடான உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஒரு காமெடி நடிகர் தானே.
நடிகர், தயாரிப்பாளர் என்று இருந்தவர் திடீரென ஒரு நாள் தேர்தலில் நிற்கப்போகிறேன் என்று அறிவித்தவரைத்தானே அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்கள் தீர்ப்பு மிகச்சரி என்று தொடர்ந்து தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து வருகிறாரே.
புட்டினுக்கே சிம்மசொப்பனமாக விளங்குகிறாரே. நோக்கம் சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. பார்க்கலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.