நடன இயக்குனர் கலா மாஸ்டர் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்பம்…. வைரலாகும் புகைப்படம் இதோ….

இந்திய நடனக் கலையில் ஒருவராக வலம்  வருபவர் கலா மாஸ்டர். இவர் தனது  பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்.  தனது 12 வயதில் ஒரு நடன உதவியாளராக அறிமுகமானார். கே. பாலச்சந்திரன் இயக்கிய  படமான ‘புன்னகை மன்னன்’ என்ற படத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இதை தொடர்ந்து கே. பாலச்சந்திரனின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்திற்கு நடன  இயக்குனராக  ஒரு வாய்ப்பு கிடைத்தது.

   

 இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஒரியா, பெங்காலி, ஆங்கிலம், இத்தாலி மற்றும் ஜப்பான் மொழிகளில் 4000 மேற்பட்ட பாடல்களுக்கு நடத்தில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.‘அழகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோழி கூவும் நேரம் ஆச்சு’ என்ற பாடல் நடன  ஆசிரியராக பணிபுரிந்து  மக்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றர்.

2000 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான ‘கொச்சூ கொச்சு சந்தோசங்கல்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுப்புற பாடலுக்கு  நடன  ஆசிரியராக பணிபுரிந்துதேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.இவர் சென்னையில் கலாவின் கலாலயா என்ற திரைப்பட நடன கல்லூரியில்  முதலில் தொடங்கினார். இவர் சகோதரியோடு சேர்ந்து  நடத்தி வருகிறார்.‘சந்திரமுகி’ என்ற திரைப்படத்திற்கு சிறப்பாக பணியாற்றி தமிழ்நாடு  மாநில திரைப்பட விருது பெற்றார்.ஏழு பெண் குழந்தைகள் உடன் பிறந்தவர் கலா.   தன் குழந்தை பருவத்தில் ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் வளர்ந்துள்ளார்.இவரது பெற்றோருக்கு கலா ஆறாவது மகள். முன்னணி நடன அமைப்பாளர் பிருந்தா மாஸ்டர் இவரது இளைய சகோதரி.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி  மக்கள் மத்தியில் மிகுத்த வரவேற்பு பெற்றது. 

இந்கழ்ச்சி மூன்று நடுவர்களில் ஒருவராக இருந்தார்.  திரைப்பட உலகில்  நடன இயக்குனர் கலாவை அக்கா என்று அழைப்பர். தற்போது கலா மாஸ்டரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வைரலாகி   வருகிறது.