“வணக்கம் அமெரிக்கா, அமெரிக்க தெருவில் உலக நாயகன்”… ப்ராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்கா சென்ற கமல் மற்றும் பிரபாஸ்… வெளியான புகைப்படங்கள்..

நடிகையர் திலகம் பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் புராஜெக்ட் கே இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

   

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதனால் இந்த திரைப்படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் இதற்காக அவர் சுமார் 150 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும் கிளிம்ஸ் வீடியோ இன்று அமெரிக்காவில் நடைபெற இருக்கும் காமிக் கான் நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் அமெரிக்கா சென்று உள்ளனர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தயாரிக்கும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அதில் கமல்ஹாசன் புகைப்படங்களை பகிர்ந்து வணக்கம் அமெரிக்கா தெருவில் உலகநாயகன் என்று குறிப்பிட்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ளது.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.