கமலேஷ் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்… ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள்… வெளியான அழகிய புகைப்படங்கள்..

ஆனந்தம் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் கமலேஷ். அம்மா இவர் சீரியல் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

   

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கமலேஷ் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான சிந்துஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கமலேஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி நிகழ்ச்சிகளிலும் ஒரு பாடகராக இருந்துள்ளார்.

பல வருடங்களாக கமலேஷ் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பிரபலங்களோடும் தங்களுடைய குடும்பத்தோடும் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

கமலேஷ் ஜீ தமிழ் சேனலில் சூப்பர் சிங்கர் செலிபிரிட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மற்றொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடா சீரியல்களிலும் கமலேஷ் நடித்து வருகின்றார். ஒரு நடிகராகவும் பாடகராகவும் இருக்கும் இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஞானம் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவருக்கு 12 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. சூட்டிங் இல்லாத சமயங்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடும் கமலேஷ் வெளியே செல்லும் இடங்களில் தனது குழந்தையோடு எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் கமலேஷ் மகள் தியாவின் பிறந்தநாள் இன்று மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்களை சீரியல் நடிகர் ராஜ்கமல் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கமலேஷ்  மகள் தியாவிற்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.