‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ பட நடிகையா இது?… அவர் இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா?… ஷாக்கான ரசிகர்கள்…

நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை விஷாகா சிங். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் தனது முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார்.

   

இத்திரைப்படம் காமெடிக்காக மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. இதை தொடர்ந்து வாய்ப்புகள் வரத் தொடங்கியது. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியான ‘வாலிப ராஜா’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. தற்பொழுது பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் நடிகை விஷாகா சிங் பல்வேறு பிசினஸ்களையும் செய்து வருகிறார்.

நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது சொந்தமாக பட தயாரிப்பு தொழில் செய்து வரும் விஷாகா சிங், WazirX NFT Marketplaceல் VP ஆக இருந்து வருகிறார். அது மட்டுமின்றி மேடை பேச்சை பல வெளிநாடுகளிலும் செய்து வருகிறார்.

அத்தோடு மெட்டாவர்ஸ், NFT, Web3, Crypo போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் அவர் அது பற்றிய conferenceகளில் மேடை பேச்சாளராக பங்கேற்று பேசி வருகிறார். மேடை பேச்சு தனது 6 வயதில் இருந்தே செய்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். வைரலாகும் அவரின் பதிவு இதோ…