நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை உலகில் மட்டுமின்றி, மற்ற மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி போன்ற பிற மொழிகளில் நடித்து சாதனை படைத்துள்ளார். அதனால் இவரை மக்கள் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். இவர் நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்களை தொடர்ந்து தற்போது, இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷ்ரோஃப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் மற்றும் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் இருந்து காவாலா மற்றும் Hukum ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
ரம்யா கிருஷ்ணன் நடனம்
அதிலும் குறிப்பாக இப்படத்தில் உள்ள காவாலா பாடலுக்கு தமன்னா நடனமாடியது ரசிகர்கள் மத்தியில் வைரலானதை தொடர்ந்து, தற்போது தமன்னாக்கு டஃப் கொடுக்கும் விதமாக இதே பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சோஷியல் மீடியாவை அதிர வைத்துள்ளார். ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கிறார். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.