என்னது அப்படியா…? கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை… குடும்பத்திற்காக தன் ஆசையை கைவிட்ட நடிகர் தனுஷ்…!!

நடிகர் தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர்  செல்வராகவனின் இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

Dhanush and Aishwaryaa Rajinikanth Photos: These photos of Dhanush and Aishwaryaa speak volumes about their amazing bond

   

இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் என்ற படம் உருவாகி, சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மாபெரும் அளவில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நிவேதிதா, சந்தீப் கிஷான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் மற்றும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை.. குடும்பத்திற்காக தனது ஆசையை கைவிட்ட தனுஷ்.. | Dhanush Sacrifice Is Dream For His Family

இதனையடுத்து D50 என்ற திரைப்படத்தில் நடிப்பது மட்டுமின்றி இயக்கியும் வருகிறார். மேலும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்துடன் தனுஷ் : வைரலாகும் புகைப்படம் - Dhanush family photo goes viral

ஆசையை கைவிட்ட தனுஷ்

நடிகர் தனுஷ் தனது தந்தையால் தான் நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார். ஆனால் சமையல் கலைஞராக வேண்டும் என்று தான் தனுஷிற்கு ஆசை இருந்துள்ளது. அப்போது அவரது தந்தை கஸ்தூரி ராஜாவிற்கு, கடன் தொல்லை இருந்ததாகவும், அதனால்  தனுஷை வைத்து படத்தை எடுத்ததாகவும் கூறப்படும்  நிலையில், தனுஷ் குடும்பத்திற்காக தன்னுடைய ஆசையை கைவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கழுத்தை நெறிக்கும் கடன் தொல்லை.. குடும்பத்திற்காக தனது ஆசையை கைவிட்ட தனுஷ்.. | Dhanush Sacrifice Is Dream For His Family