கடலில் Air பலூனில் பறந்தபடி தண்ணீரில் மூழ்கி வீடியோ வெளியிட்ட kpy வினோத்… ‘உயிர் போயி உயிர்  வந்துடுச்சுடா சாமி’… வைரலாகும் வீடியோ….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று கலக்கப்போவது யாரு. மக்களிடம் அதிகம் ரீச்சான ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட கலைஞர்களுக்கு சினிமாவில் கலக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   

தற்போது ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. KPY பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் இந்த சீசனை தொகுத்து வழங்க ரேஷ்மா, மதுரை முத்து, தாடி பாலாஜி மற்றும் ஸ்ருதிகா என 4 பேரும் நடுவர்களாக உள்ளார்கள்.

கலக்கப்போவது யாரு சீசன் 6 கலந்துகொண்டு டைட்டில் வின்னரானவர் தான் வினோத். இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகளில் நகைச்சுவை செய்து கலக்கி வருகிறார். இவர் அதோடு மட்டுமின்றி தற்பொழுது சின்ன திரையிலும் என்ட்ரி  கொடுத்து பல்வேறு சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

kpy வினோத் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் kpy வினோத். இவர் தற்பொழுது கடலில் Air பலூனில் பறந்து தண்ணீரில் மூழ்கி என்ஜாய் செய்த வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….