21 நாள் ஷூட்டிங் வேஸ்ட்.. மொத்தமா போச்சு.. திரும்ப எடுக்க முடியல.. லால் சலாம்ல நடந்தது இது தான்.. ஓபனாக பேசிய ஐஸ்வர்யா..!

ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளிவந்தாலே, அவரின் ரசிகர்கள் அதனை வெறித்தனமாக கொண்டாடுவார்கள். இன்று வரை, சூப்பர் ஸ்டாருக்கான எதிர்பார்ப்பு என்பது அப்படியே தான் இருக்கிறது. ஆனால், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விக்ராந்த் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.

   

அத்திரைப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் தான் பரவியது. இந்நிலையில், லால் சலாம் திரைப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அந்த திரைப்படத்தில் நடந்த தவறு குறித்து கூறியிருக்கிறார் அவர் தெரிவித்திருப்பதாவது, லால் சலாம் திரைப்படத்தின் 21 நாட்கள் படம் பிடிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் அழிந்து போனது.

அந்த 21 நாட்களும் ரொம்ப சிரமப்பட்டு படப்பிடிப்பை நடத்தி இருந்தோம். உண்மையான கிரிக்கெட் போட்டி போன்று காண்பிக்க வேண்டும் என்பதற்காக கேமராக்களை பார்த்து பார்த்து வைத்தோம். 10 கேமராக்களை வைத்து 21 நாட்களாக நடந்த படப்பிடிப்பு காணாமல் போனது.

அதை திரும்ப நம்மால் எடுக்க முடியாது. மேலும், படப்பிடிப்பை மீண்டும் நடத்துவது நடிகர்களுக்கும், பட்ஜெட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வேறு வழியின்றி ரீ எடிட்டிங் செய்தோம் என்று கூறி இருக்கிறார்.