திருப்பாச்சி படத்துல ஆடு வெட்டும் சீன்.. விஜய் மட்டும் அத சொல்லலனா அவ்ளோ தான்.. மீசை ராஜேந்திரன் சொன்ன ரகசியம்..!

தளபதி விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படம் தற்போது வரை ரசிகர்களின் விருப்பமான திரைப்படமாக அமைந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் தற்போது வரை மக்களால் விரும்பப்படுகிறது. இந்நிலையில், அத்திரைப்படத்தில் ஆடு வெட்டும் நகைச்சுவை காட்சியில் நடித்த மீசை ராஜேந்திரன் சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

   

அவர் தெரிவித்திருப்பதாவது, திருப்பாச்சி திரைப்படத்தில் நாங்கள் ஆடு வெட்டும்போது விஜய் வந்து அதனை தடுப்பார். உடனே, அவரை கட்டிப்போட்டு வெட்டுவதற்கு தயாராகி விடுவோம். அந்த காட்சியை படமாக்கும் போது விஜய் முகத்தில் அதிகமாக தண்ணீரை ஊற்றி விடுவார்கள். அப்போது, நான் விபூதியை எடுத்து அவர் முகத்தில் அடிக்க வேண்டும்.

அந்த சமயத்தில், கண்ணால் என்னை விஜய் அழைத்தார். அருகில் சென்ற போது, அவர் என்னிடம் கை நிறைய திருநீரை எடுங்கள். என் மீது அப்படியே போட்டுவிடாதீர்கள். என் முகத்தில் மொத்த விபூதியையும் போட்டால், அடுத்து என்னால் டயலாக் பேச முடியாது. எனவே, தட்டில் அடிக்கும்போது வேகமாக விபூதியை எடுத்துவிட்டு என் மீது பூசும்போது மெதுவாக பூசி விடுங்கள்.

தலையில் மட்டும் திருநீரை போடுங்கள். முகத்தில் பட வேண்டாம் என்று கூறினார். இப்போதும் நீங்கள் அந்த காட்சியைப் பார்த்தால் நன்றாக தெரியும். நான் மெதுவாகத்தான் தான் அவரின்  நெற்றியில் பூசி விடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.