
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு நடுவில் விஜய் தன் ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் விஜயை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் கூடியதால் காவல்துறையினர் தடியடி நடத்தும் நிலை வர ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது கேரளாவில் இருக்கும் திருவனந்தபுரத்தில் கோட் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடக்கவுள்ளது. எனவே, விஜய் திருவனந்தபுரத்திற்கு சென்றிருக்கிறார். கேரளாவில் தளபதி ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவரின் திரைப்படங்கள் அங்கு வசூலில் சக்கை கோடு போடும்.
விஜய்யை பார்ப்பதற்காக கேரள ரசிகர்கள், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், உலக வரலாற்றிலேயே, முதல் தடவையாக சென்னையில் இருந்து கேரளா விமானம் செல்லும் ஒரு நடிகருக்காக காத்திருந்து, மிகக் குறுகிய நேரத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான நபர்களால் corella air aviation எல்லாம் விமானம் தேடப்பட்டிருக்கிறது.