என் தாயை விட ஒரு படி மேல… எங்க அண்ணன் கேப்டன்…. கதறி கதறி அழுத MS பாஸ்கர்…!

சிறந்த நடிகராகவும், ஆளுமை திறன் வாய்ந்த அரசியல்வாதியாகவும் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த மனிதராகவும் வாழ்ந்த நடிகர் விஜயகாந்த் நேற்று காலையில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவு, ரசிகர்களையும், தொண்டர்களையும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பலர்க்கும் அவர் பல உதவிகளை செய்திருக்கிறார். அவரை பற்றி புகழாத நடிகர்களே இல்லை என்று கூறலாம். இந்நிலையில், பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், குணசித்ர நடிகராகவும் நடித்து மக்களிடையே பெயர் பெற்ற நடிகர் M.S பாஸ்கர் கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த போது மனதுடைந்து கதறி கதறி அழுதுவிட்டார்.

   

முன்னதாக M.S பாஸ்கர், கேப்டன் விஜயகாந்த் குறித்து பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதில்  விஜயகாந்த் எல்லோருக்கும் தாய் போன்றவர். தர்மபுரி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மிரட்டி சாப்பிட சொல்லுவார். அந்த படப்பிடிப்பு முடிந்த போது எட்டு கிலோ எடை கூடி விட்டேன். அந்த அளவிற்கு நிறைய சாப்பிட வைத்து விடுவார்.

பாஸ்கர் வாங்க, வாங்க சாப்பிடுங்க, உட்காருங்க என்று மிரட்டுவாரு. அதட்டி தான் சாப்பிட வைப்பாரு. சாப்பிடாமல் விடமாட்டாரு. பாயாசம் சாப்பிடுங்க, ஜீரணமாகிடும் என்பார். மதியம் நிறைய சாப்பிட்டு முடித்தவுடன் கண் சொக்கி தூக்கம் வந்துவிடும். உடனே, அவர் இயக்குனரிடம் பாஸ்கர் அதிகம் சாப்பிட்டு விட்டார்.

அவர் தூங்கட்டும் என் காட்சிகளை எடுத்துவிட்டு அதன் பிறகு அவருக்கான காட்சிகளை எடுங்கள் என்று கூறுவார். ஒரு தாய் தான், தன் பிள்ளையை சாப்பிட்டு தூங்குவதை அழகு பார்ப்பார். அந்த மாதிரி தான் கேப்டன் விஜயகாந்த் அவர்களும், தாய்க்கும் ஒரு படி மேல் என்று கூறியிருக்கிறார்.