ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது அம்மாவின் பிறந்தநாளை சர்ப்ரைஸ் ஆக கொண்டாடிய ‘முத்தழகு சீரியல்’ நடிகை… வைரலாகும் வீடியோ…

விஜய் டிவியின் மாப்பிள்ளை, ராஜா ராணி, கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு போன்ற  சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை வைஷாலி தனிகா. இவர் முன்னதாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர்  சீரியலுக்கு வருவதற்கு முன்பே நடிகர் விஷாலுடன் இணைந்து திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்துள்ளார்.

   

இதை தொடர்ந்து காதல் கசக்குதய்யா, கடுகு, சர்க்கார், பைரவா, ரெமோ போன்ற படங்களிலும்  சிறு வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை விட சீரியல்களில் கிடைத்த பிரபலமே அதிகம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘முத்தழகு’ சீரியலில் தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சீரியலில் ஹீரோவுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.

அதில் ஒரு மனைவியாக நடிகை வைஷாலி நடித்துக் கொண்டு வருகிறார். இவர் சத்யா என்பவரை நீண்ட நாளாக காதலித்து வந்தார். தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்த இவர் பெற்றோர் சம்மதத்துடன் சத்யாவை கரம் பிடித்தார். சமீபத்தில் நடிகை வைஷாலி தனது கணவருடன் இணைந்து பிட்னஸ் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கினார்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வைஷாலி . இவர் தற்பொழுது தனது அம்மாவின் பிறந்தநாளை சர்ப்ரைஸ் ஆக ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாக ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vaishali Thaniga (@_vaishalithaniga)