மாமன்னன் ரத்தினவேலுவா இப்படி..! வைரலாகும் பஹத் பாசிலின் டவல் டான்ஸ் முகம் சுழிக்கும் ரசிகர்கள்..

மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் தான் இவர் பஹத் பாசில். இவர் ‘ கையெத்தும் தூரத்து’  என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானர். அதைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஆவேசம்’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது .

   

கடந்த வருடம் மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி  ஹிட்  அடித்த கிட்டடித்த ரோமாஞ்சம் என்ற படத்தில் இயக்கிய  ஜித்து மாதவன்  இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தாதா கதாபாத்திரத்தின் நடித்துள்ளார் பஹத் பாசில்.  வித்யாச வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து  வருகிறார்  பஹத் பாசில். இந்த  படத்தின் ப்ரோமோசனை கூட வித்தியாசமாகவே செய்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தை  வரவேற்கும் விதமாக நேற்று ஒரு டீசர்  வெளியிட்டுள்ளார்.

அதில்  இடுப்பில் துண்டு மட்டும்  கட்டி கொண்டு பாத்ரூமில் இருந்து வெளியே வரும் பஹத் பாசில் ஒரு வீடியோ வெளியிட்டு  அந்த படத்தில் வரும்  அசத்தலான டயலாக் ஒன்றை பேசியுள்ளார். ‘எடா  மோனே நாளே காணலாம்’ என்கின்ற வசனத்தை கூறியுள்ளார்.தற்போது  அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.