விஜய்க்கு தெரிந்த எல்லாம்.. த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், மட்டும் தான்.. ஒபன் டாக் செய்த பிரபலம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘லியோ’.  தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

   

அதை தொடர்ந்து தளபதி 69 படத்தில் கமிட்டாகியுள்ளார்.  இந்த இரண்டு படங்களும் முடித்த பிறகு அரசியலில் களம் இறங்க உள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில்  பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் விஜயை பற்றி பேசி உள்ளார்.

 

அதில் அவர் தமிழ் தெரியாது ,தேசம் என்றால் தெரியாது, எதுவுமே தெரியாது அவருக்கு தெரிந்ததெல்லாம் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் தான். கொள்கை ரீதியாகவும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் பத்தி எதுவும் தெரியாது.

விஜய் ரசிகர்களும் அப்படித் தான் இருக்கிறார்கள்.விஜய் இன்னும் அரசியல்மயப்படுத்தவில்லை. அப்படி செய்தால் யாரும் அவர் பின்னாடி வரமாட்டார்கள் என்று  கூறியுள்ளார்.