
நடிகை நயன்தாரா சுமார் 20 வருடங்களாக கதாநாயகியாகவே நீடித்து, தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல வருடங்களாகவே அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிவிட்டார்.
திரைப்படங்களில், அவர் கவர்ச்சியாக நடித்தாலும் பெரும்பாலும் விருது விழாக்களில் பங்கேற்கும் போது சேலை அணிந்து கொண்டு தான் வருவார். இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா நேற்று நடந்திருக்கிறது.
அதில், நயன்தாராவிற்கு ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவிற்கு வந்த நயன்தாரா அழகிய மஞ்சள் நிற புடவையில் கண்ணை கவரும் வகையில் ஜொலிக்கிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.