மூர்த்தியை கோபத்தில் அடிக்க சென்ற ஜீவா… குடும்பத்தில் வெடித்த பயங்கரமான சண்டை… பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ இதோ…

விஜய் தொலைக்காட்சியை தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியளுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். ஒரு கூட்டு குடும்பம் எவ்வாறு இருக்கும், அதில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்பதை இந்த சீரியல் மக்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

   

இதை தொடர்ந்து இயக்குனரும் அவர்களுக்கு தகுந்தது போல கதைகளை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தி செல்கின்றார். சமீபத்தில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து நடிகை சாய் காயத்ரி விலகியதும், அவருக்கு பதிலாக தற்பொழுது மீண்டும் வி ஜே தீபிகாவே நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய நாளின் பிரமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் கடை முன்பு மக்கள் குவிந்து நிற்கின்றனர். கடையை அரைகுறையாய் திறந்து வைத்து விட்டு எங்க போன என வீட்டிற்கு வந்து ஜீவாவிடம் கத்துகிறார் மூர்த்தி.  இவ்வாறு கேட்டதும் ஜீவா கோபத்துடன் ‘அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்று கேட்க,’ ஏன்டா இப்படி கத்துற?’ என மூர்த்தி கேட்கிறார்.

இதை தொடர்ந்து பேசிய ஜீவா ‘மீனா பாதி வழியில் நின்று போன் பண்ணினாள். அதனால் தான் போனேன். இது குத்தமா?’ என கேட்கிறார்.  இதை தொடர்ந்து மூர்த்தி ஆட்டோவில் ஏற்றி விட்டு இருக்கலாம் தானே எனக் கேட்கிறார். இதைக் கேட்டு கொந்தளித்த ஜீவா ‘சும்மா கடுப்பை கிளப்பாதீங்க, பணத்தை கொடுத்து வைச்ச மாதிரி’ என்று கேட்கின்றார்.

அதன் பின்னர் ‘ஏன் கல்லப்பெட்டியை மூடி வச்சீங்க. நான் பணத்தை கொண்டு போயிடுவேன்னா’ என்று கூற மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். இதைத்தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெரிய சண்டை காத்திருக்கிறது என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகிறது. இந்த சண்டையில் குடும்பம் மீண்டும் பிரியுமா என்பதை நாம் இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதோ அந்த ப்ரோமோ வீடியோ….