சூப்பர் ஸ்டாரை ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் தனது குழந்தைகளுடன் சந்தித்த அமைச்சர்… அவரே வெளிட்ட வைரல் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் முடித்த இவர் தற்பொழுது தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், உருவாகி வரும் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை பற்றிய அப்டேட்கள் அவ்வப்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் லால்சலாம் படப்பிடிப்பில் பங்கேற்க வந்த ரஜினி காந்துடன் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது மகன்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டு, அவரது சமூக வலைதளத்தில் படத்தை பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஆன்மீகமும் அன்பும் கலந்த வசீகரப் புன்னகையுடன் அருகில் செல்வோருக்கு ஆத்மார்த்தமாய் நேர்மறை சக்தி உணர்வை ஊட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.