மப்பு ஓவரோ..? கடலின் மேலே படுக்கையை போட்டு… கிரங்கி கிடந்த நடிகை…!

கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், அந்த திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு இல்லாமல் போனது. எனவே, அவருக்கு வாய்ப்புகள் இல்லை. அதன்பிறகு, தெலுங்கு திரையுலகிற்கு சென்றுவிட்டார். அங்கு பிரபலமான அவர் கோடிகளில் சம்பளம் பெறும் நடிகையானார்.

   

அதனைத்தொடர்ந்து மீண்டும் தமிழ் திரையுலகில் காலடி வைத்த அவர், நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு, ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு காலில் அடிபட்டது. தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறது. மேலும், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், ரிசார்ட் ஒன்றில் தன் பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடிய பூஜா, வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், மாலத்தீவு கடலின் மேல், படுக்கையை  விரித்து படுத்திருக்கிறார். சினிமால தா வாய்ப்பு இல்ல, படுக்கவுமா இடம் கிடைக்கல என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.