நடிகை பிரியாமணியா இது.. ஸ்டிவ்லஸ் ட்ரஸ்சில் தாறுமாறான கவர்ச்சி.. கண் இமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவர் பிரியாமணி. இவர் நடிகை மட்டுமல்ல வடிவழகி கூட.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

   

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 2007 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி படமாக அமைந்த ‘பருத்திவீரன் ‘ கிராமத்து கதை மையமாக கொண்டு கதாபாத்திரத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படமானது இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தந்தது. மேலும் இவர் தமிழில் அது ஒரு கனாக்காலம் ,மது, மலைக்கோட்டை, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், சாரு லதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக தமிழில் சாருலதா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம்2012 ஆம் ஆண்டு வெளிவந்தது .

அதன் பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்து, அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த ஜவான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது மார்டன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.