என்ன கொடூரம்…? மைக்ரோ வேவ் ஓவனில் தூங்க வைத்த தாய்… குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…!

உலக நாடுகளில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பல கொடூர சம்பவங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது. இணையத்தில் வெளியாகும் பல சம்பவங்கள் மனதை பதறச் செய்கிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் தன் ஒரு மாத கைக்குழந்தையை தொட்டில் என்று நினைத்து தவறுதலாக மைக்ரோவேவ் ஓவனில் தூங்க வைத்திருக்கிறார்.

   

சிறிது நேரத்திற்கு பிறகு ஓவனை திறந்து பார்த்தால், குழந்தை கடும் தீக்காயங்களுடன் மூச்சு திணறி கொண்டிருந்துள்ளது. உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவத்தில், குழந்தையின் தாயான அந்தப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.