தனுஷிற்கும் வடிவேலுவிற்கும் நடந்த மோதல்…. என்ன நடந்தது…? வெளிவந்த பலநாள் ரகசியம்…!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தனுஷ், தமன்னா, விவேக் நடித்து கடந்த 2009-ஆம் வருடத்தில் வெளிவந்த படிக்காதவன் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்தில் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் நகைச்சுவை காட்சிகள் பெரிதும் பேசப்பட்டது.

   

தற்போது வரை பலருக்கும் அந்த நகைச்சுவை காட்சிகள் விருப்பமானதாக அமைந்திருக்கிறது. எனினும், முதலில் அந்த கதாபாத்திரத்திற்கு வடிவேலு தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் பாதி நாட்கள் படப்பிடிப்பில் நடித்த அவருக்கும் தனுஷ்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் படத்தில் இருந்து விலகிக் கொண்டார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, வடிவேலு பெரும்பாலும் தான் நடிக்கும் படத்தின் கதையில் தலையிடுவார். பல வகைகளிலும் அந்த ஸ்க்ரிப்டை மாற்றுவார். அது மட்டுமல்லாமல் கதாநாயகனுக்கு இணையான அனைத்தும் தனக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.

அப்படித்தான் அவர் படிக்காதவன் திரைப்படத்திலும் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தை கேட்டதால் தனுஷ்க்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.